தமிழகம்

திருமணமான 1 மாதத்தில் உயிரிழந்த புதுப்பெண்.! குடும்பத்தாருக்கு வந்த ஒரு போன் அழைப்பு.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

விழுப்புரம் மாவட்டம் நரையூர் தனசிங்குபாளையம் பகுதியை சேர்ந்த சிவபாக்கியம் என்ற பெண்ணிற்கும

விழுப்புரம் மாவட்டம் நரையூர் தனசிங்குபாளையம் பகுதியை சேர்ந்த சிவபாக்கியம் என்ற பெண்ணிற்கும், புதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகரைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் சிவபாக்கியம் தனது கணவருடன் புதுச்சேரியில் தங்கியிருந்துள்ளார்.

இந்தநிலையில் சிவபாக்கியத்தின் தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். இதற்கு ஏழுமலை குடும்பத்தினர் சிவபாக்கியத்தை தாமதமாக அனுப்பியுள்ளனர். மேலும், ஏழுமலை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக சிவபாக்கியம் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென சிவபாக்கியம் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த சிவபாக்கியம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சிவபாக்கியத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஏழுமலை வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக கூறி, உடலை வாங்க மறுத்து காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் சிவபாக்கியத்தின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.


Advertisement