தமிழகம்

கட்டின தாலியில் ஈரம் கூட காயல..! உன் வாசனை இன்னும் என்னைவிட்டு போகலடா..! மனைவி கண்முன்னே கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.! பதறவைக்கும் சம்பவம்.!

Summary:

Newly married man drowns in river in front of wife

திருமணம் முடிந்த சில நாட்களில் மனைவி கண்முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சட்டாம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் ரஞ்சித் குமார். 23 வயதாகும் ரஞ்சித்குமார் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் மெக்கானிக் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா(21) என்ற பெண்ணுடன் ரஞ்சித் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாகமாறியுள்ளது .

இருவரும் நீண்டநாட்களாக  காதலித்துவந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. காதலுக்கு எதிர்ப்பு கூறாமல் பெற்றோரும் திருமணத்திற்குப் பச்சைக் கொடி காட்ட, கடந்த மே மாதம் 3-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்து புது கணவன் மனைவி இருவரும் தங்கள் உறவினர்களின் வீட்டிற்கு விருந்திற்குச் சென்று வந்துள்ளனர். அந்த வகையில் இருவரும் சமீபத்தில் போடிநாயக்கனூரில் உள்ள ரஞ்சித்குமாரின் பாட்டி வீட்டிற்கு விருந்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

போடிநாயக்கனூரில் இருந்து திண்டுக்கல் வரை பேருந்தில் வந்த இவர்கள் திண்டுக்கல்லிலிருந்து தாராபுரத்துக்கு வர பேருந்து வசதி இல்லாததால் இருவரும் தாராபுரத்துக்கு வந்த ஒரு சரக்கு ஆட்டோவில் ஏறி வந்துள்ளனர். தாராபுரம் அருகே வாகனத்தில் இருந்து இறங்கிக்கொண்ட இருவரும் அங்கிருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்றுள்ளனர்.

தாராபுரம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே இருவரும் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஆற்றில் நீரை பார்த்ததும் உள்ளே இறங்கி குளிக்க ஆசைப்பட்டுள்ளனர். இதனை அடுத்து ரஞ்சித்குமார் முதலில் ஆற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்துள்ளார். தான் இறங்கிய பகுதி புதை மணல் பகுதி எனத் தெரியாமல் ரஞ்சித் குளித்துக்கொண்டிருந்தநிலையில் சிறிதுநேரத்தில் தண்ணீரில் மூழ்கி தன்னை காப்பாற்றும்படி கைகளை மேலே நீட்டி கதறியுள்ளார்.

தன் கண்முன்னே கணவன் நீரில் மூழ்குவதை பார்த்த கல்பனா தனது கணவனை காப்பாற்றும்படி கத்தியுள்ளார். கல்பனாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ரஞ்சித்குமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி ரஞ்சித்குமாரின் சடலத்தை மீட்டு மேலே கொண்டுவந்தனர்.

தனது கணவனின் சடலத்தை பார்த்த கல்பனா கதறி அழுதது  அனைவரையும் கண்கலங்க வைத்தது. திருமணம் முடிந்து வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டிய இளம் வயதில் மனைவி கண்முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


Advertisement