என்னது.... புதிதாக பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு வளர்ச்சி! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்....
கர்நாடக மாநிலத்தில் அரிய மருத்துவச் சம்பவம் ஒன்று நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தார்வார் மாவட்டத்தில் பிறந்த புதிதாய் பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு கண்டறியப்பட்ட சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தார்வார் மாவட்டத்தில் நடந்த அதிசய மருத்துவம்
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் செயல்பட்டு வரும் கிம்ஸ் அரசு மருத்துவமனையில், குந்துகோல் தாலுகாவை சேர்ந்த பெண் தனது இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 23-ந்தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில நாட்களில் குழந்தையின் வயிறு அசாதாரணமாக பெரிதாக இருப்பது கவனிக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி
இதையடுத்து மருத்துவர்கள் பச்சிளம் குழந்தைக்கு பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் கரு வளர்ச்சி இருப்பது தெரியவந்தது. மேலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் குழந்தையின் வயிற்றில் முதுகெலும்புடன் கூடிய கரு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையும் படிங்க: மரணித்த குழந்தை.. உயிருடன் பிறந்த அதிசயம்.. GH மருத்துவர்கள் அலட்சியம்.!
மருத்துவ அதிகாரியின் விளக்கம்
கிம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி ஈஸ்வர் ஹசாபி கூறுகையில், “இது ஒரு மிக அரிய சம்பவம். தற்போது எம்.ஆர்.ஐ. அறிக்கை ஆய்வு செய்யப்படுகிறது. அதன் பின்னர் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மருத்துவ ரீதியாக அபூர்வமாக கருதப்படும் இந்த நிலை, பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா... ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? அந்த அம்மாவின் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிகையை பாருங்க! நெகிழ்ச்சி சம்பவம்...