தமிழகம் லைப் ஸ்டைல்

வித்தியாசமான ஒரு திருமண பத்திரிகை! இன்னைக்கு இதுதான் ட்ரெண்டிங்!

Summary:

New type of marriage invitation goes viral on iternet

பொதுவாக திருமணம் என்றாலே பத்திரிகை அடிப்பது வழக்கம். அதுவும் நம் ஊரில் சிலர் வித்தியாசமாக பத்திரிகை அடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அந்த மாதிரி ஒரு வித்தியாசமான பத்திரிகை பற்றித்தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

வால்பாறையில் முத்தமிழ்ச்செல்வன் என்பவருக்கு முத்துலட்சுமி என்பவருக்கும் போன ஞாயிற்றுகிழமை திருமணம் நடந்தது. முத்துச்செல்வன் கோவை பிர்லியன்ட் மெட்ரிக் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமிக்கும் தான் திருமணம்.

இவர்களது திருமணத்திற்கு அச்சிடப்பட்ட பத்திரிகையில் பொதுவாக அணைத்து பத்திரிகைகளில் கடைபிடிக்கப்படும் அதே விஷயங்கள்தான் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் கல்யாண பத்திரிகையில் கடைசியில் ஒரு பாயிண்ட் சொல்லி இருக்கிறார் மாப்பிள்ளை. அதுதான் ஹைலைட்!! அதாவது "குறிப்பு" என்று போட்டு இப்படி அச்சிட்டிருக்கிறார், "கடந்த 38 ஆண்டுகளில் நான் தங்கள் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய்யும் எழுதி உள்ளேன். 1980 முதல் இன்றுவரை என் குடும்பத்தில் இதுவே முதல் காரியம் என்பதால் தாங்கள் பெற்றுக் கொண்ட சீர் அல்லது மொய்யை கட்டாயம் மொத்தமாக செலுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முத்துச்செல்வனின் இந்த முயற்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement