தமிழகம் காதல் – உறவுகள்

என் அண்ணியோட அழகைப் பார்! திருமணமான 4 மாதங்களிலேயே தூக்கில் தொங்கிய பெண்! வெளியான பகீர் பின்னணி!

Summary:

New married pride commits suicide for husband torture

கடலூர் மாவட்டம் ஒடியடிகுப்பத்தில் வசித்து வந்தவர் அருள். அவர் போலீஸ் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பண்ருட்டி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்கள் இருவரும் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள போலீஸ் குவாட்டர்ஸில் வசித்து வந்துள்ளனர். 

 இந்நிலையில் திடீரென ராஜேஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதனை தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில் ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் என்பவர் பட்டினப்பாக்கம் போலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதில் எனது அக்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னிடம் செல்போனில் பேசினார். அப்பொழுது அவரது கணவரும், அவரது அண்ணி வெண்ணிலாவும், நாங்கள் சந்தோஷமாக இருக்க நீ தடையாக இருக்கிறாய். நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்துவிடு. சொத்துக்கள் எல்லாம் எனது பேருக்கு வந்துவிடும் என அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறார். மேலும் எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும்,  செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement