திருமணமான 5 நாளிலேயே கணவர் இல்லாத நேரத்தில் மாமியாரை கதறித்துடிக்கவிட்ட மருமகள்.! வெளியான அதிர்ச்சி தகவல்!!

new marriage girl commit suicide


new-marriage-girl-commit-suicide

தேனி மாவட்டம் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவரது மகன் சேதுபதி. அவர் விடுதி உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் அவருக்கும் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த சிவசக்திக்கும் கடந்த 5 தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு சேதுபதி அவரது மனைவியுடன் வீட்டு மாடியில் உள்ள அறையில் வசித்துவந்தார். மேலும் வீட்டின் கீழ்தளத்தில் சேதுபதியின் பெற்றோர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சேதுபதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும், சிவசக்தி  மாடியில் இருந்து கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவருடைய மாமியார் புஷ்பவள்ளி, மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு சிவசக்தி துப்பட்டாவில் தூக்கில் தொங்கியுள்ளார்.

marriage

இதனை கண்டு மாமியார் புஷ்பவள்ளி அலறி துடித்துள்ளார். மேலும் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், சிவசக்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவசக்தி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார்கள் சிவசக்தி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.