தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் உதயமாகிறது புதிய மாவட்டம்.! தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

Summary:

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இன்றுமுதல் உதயமாகிறது.

தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது.

இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (28/12/2020) காலை 09.30 மணிக்கு காணொளி மூலம் தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

  

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.  தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவெடுப்பதால், தனி மாவட்டமாக வேண்டும் என்ற தங்கள் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியுள்ள நிலையில் மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


Advertisement