ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு.!
திருக்கோவில்களில் நடைபெறும் திருமணங்களில், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் மணமக்களுக்கு கோயில் சார்பில் புத்தாடை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருக்கோவில்களில் நடைபெறும் திருமணங்களில், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், கோவில் மண்டபங்களில் வாடகையின்றி திருமணம் நடத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், திருக்கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள் வழங்கப்படும் என மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
இதனை செயல்படுத்துவதற்கான உத்தரவை இந்து சமய அறநிலைத்துறை தற்போது பிறப்பித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை திருக்கோவில்களின் வரவு, செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.