அடக்கடவுளே.. இப்படியா நடக்கணும்! கம்ப்யூட்டர் கிளாஸ் சென்ற 2 மகள்கள்! பெற்றோருக்கு வந்த வாய்ஸ் நோட்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பகீர் பின்னணி..



nepali-girls-found-dead-bhaktapur

நேபாளத்தை சேர்ந்த ரேணுகா கண்டேல் (16) மற்றும் சிர்ஜானா (13) என்ற இரண்டு சிறுமிகள் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுமிகளின் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்தது. சமீபத்தில், கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்கிறோம் என கூறிய அவர்கள், வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், பெற்றோருக்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்பி, “பெங்களூரு செல்கிறோம், பணம் சம்பாதித்து வந்துவிடுவோம்” என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்த விசாரணையில், காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர்கள் வேலை பார்த்துவரும் தகவல் பெற்றோர்களுக்குக் கிடைத்தது. ஆனால் விபரம் தெளிவாக இல்லை.

அதே நேரத்தில், பக்தாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், நைலான் கயிறு சுற்றிய நிலையில், அந்த இரு சிறுமிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் மரணத்தைச் சுற்றி சந்தேகங்கள் உருவாகியுள்ளன. அவர்கள், “மாணவிகள், தங்கும் இடம் தேவை” என கூறி 15 நாட்களுக்கு முன்பு மட்டுமே அந்த வீட்டில் குடியேறியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கொலோடியன் பேபி! பிறந்தவுடனே குழந்தையின் உடலின் பல பகுதிகளில் வெடிப்புகள்! வேற்றுக்கிரகவாசியை போல் இருந்த குழந்தையின் தோற்றம்! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!

இந்த துயரமான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலிருந்து பெற்றோர் தற்போது உடலை எடுக்க நேபாளம் நோக்கி பயணம் செய்துள்ளனர்.

 

இதையும் படிங்க: மூன்று வயது குழந்தையை தலைகீழாக தூக்கி கொடூரமாக தெருவில் நடந்து சென்ற தந்தை! அதிரவைக்கும் காரணம்! நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி...!