நெல்லை பல்கலை. முன்னாள் து.வேந்தர் அறவாணன் மறைவால் சோகத்தில் மூழ்கும் தமிழுலகம்.!

நெல்லை பல்கலை. முன்னாள் து.வேந்தர் அறவாணன் மறைவால் சோகத்தில் மூழ்கும் தமிழுலகம்.!


nellai-univercity-venther-aravanan-death

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் க.ப அறவாணன் இன்று இயற்கை எய்தினார். 

திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடி என்னும் ஊரில் ஆகஸ்ட் 9, 1941 அன்று பிறந்த இவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக பொறுப்பு வகித்தார். மேலும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் பொருளாளரும் ஆவார். இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் விளங்கினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருதை பெற்றவர்.

இவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் தரப்பினரிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.