தமிழகம் சமூகம்

மனைவி அவரது தங்கை என பல பெண்களை ஏமாற்றிய பலே காதல் மன்னன்; வெளியான அதிர்ச்சி தகவல்.!

Summary:

namakkl, selam - hubent and wife issue

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் இளவரசி வயது 21. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் வயது 24. இருவரும் உறவினர் என்பதால் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென கர்ப்பமான இளவரசியை ஏமாற்ற முடிவு செய்துள்ளார் கார்த்திக். இதன் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணின் பெற்றோர் திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இருதரப்பும் சமரசமாகி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், வேலை தேடுவதாக வெளியூர் சென்ற கார்த்திக் அதன்பிறகு இளவரசியை தொடர்பு கொள்ளவில்லை. சில நாட்களுக்கு பிறகு, இளவரசியின் பெரியப்பா மகள் மைதிலி என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக இளவரசிக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசி மற்றும் அவரது பெற்றோர் கொளத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் கார்த்திக் திருப்பூரில் பணியாற்றியபோது அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதும் அண்மையில் தெரியவந்து இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement