லஞ்சம் வாங்கிய பணத்தை மென்று தின்ற போலீஸ்.. நாமக்கல்லில் பரபரப்பு., அதிரவைக்கும் பின்னணி.!

லஞ்சம் வாங்கிய பணத்தை மென்று தின்ற போலீஸ்.. நாமக்கல்லில் பரபரப்பு., அதிரவைக்கும் பின்னணி.!



namakkal-police-selvakumar-caught-by-bribe

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலாம்பாளையத்தில் 42 வயதான பிரகாஷ் என்பவர் ஈரோட்டிற்கு வந்தபோது 70 வயது மூதாட்டி மீது அவரது பைக் மோதியதில் அந்த மூதாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒரு நாள் மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இருந்து எஸ் எஸ் ஐ செல்வகுமார் என்பவர் பிரகாஷை தொடர்பு கொண்டு வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறி விசாரணைக்கு அழைத்துள்ளார். 

namakkal

கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் எனில் ஜாமீன் தொகை 10,000 ரூபாய் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். இரண்டு ஜாமீன் தாரர்களையும் உடன் அழைத்து வர சொல்லி தெரிவித்துள்ளார். காவல்துறை நடைமுறைகளுக்கு பின் பிரகாஷ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரது பைக்கை போலீசார் கொடுக்கவில்லை. 

namakkal

அந்த பைக்கை கொடுப்பதற்கு செல்வகுமார் ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து பிரகாஷ் ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் ரசாயனம் தடவிய பணத்தை செல்வகுமாரிடம் கொடுத்து அவர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பார்த்த செல்வகுமார் அந்த ரூ.5000 பணத்தை வாயில் போட்டு மென்று மறைக்க முயற்சித்து இருக்கிறார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செல்வக்குமாரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.