17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்... நாகர்கோவிலில் பரபரப்பு!!

17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்... நாகர்கோவிலில் பரபரப்பு!!


nagercoil-plus-2-student-sexually-harassed-mother-cheat

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் அதே பகுதியில் மந்திரீகராக இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மாந்திரீகம் சம்பந்தமாக சிவகுமாரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். 

அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அடிக்கடி சிவகுமாருடனான சந்திப்பு கள்ளக்காதலில் முடிந்தது. இதனையடுத்து சிவகுமாரும் அந்த பெண்ணும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சிவகுமார் வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் 17 வயது சிறுமி மட்டுமே தனியே இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி கொண்ட சிவகுமார் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

Nagerkovil

மேலும் இச்சம்பவம் குறித்து யாருடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார். ஆனால் அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. அதனையடுத்து சிறுமி வெளிநாட்டில் வாழும் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

தந்தையின் அறிவுறுத்தியதன் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிறுமி. புகாரின் அடிப்படையில், போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சிவக்குமார் மற்றும் சிறுமியின் தாயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து, சிவகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கேவில் சிறையிலும், மாணவியின் தாய் தக்கலை சிறையிலும் அடைத்தனர்.