தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வி.சி.க நிர்வாகி எரித்துக்கொலை?.. வீட்டுமுன்பு சடலமாக மீட்பு.. நாகையில் பேரதிர்ச்சி.!
பாப்பாகோவில் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்மமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டவாறு பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாப்பாகோவிலை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). இவரின் மனைவி அனுசுயா (வயது 36). இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள் உள்ளனர். ராஜ்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாப்பாகோவில் கிளை செயலாளராக இருந்து வந்துள்ளார்.
ராஜ்குமார் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் அவரின் வீட்டு வாசலில், உடலில் எறிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் உறவினர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், அவர்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.