கணவன், மனைவிக்கு இடையே வில்லியாக வந்த அண்ணி! 2 வயது குழந்தையை அனாதை ஆக்கிய தந்தையின் செயல்..!



Murder

பனைக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் - தனலெட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு வயதில் மகள் இருந்துள்ளார். 

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முனீஸ்வரன் தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் தனது அண்ணியிடம் அனுப்பியுள்ளார். இதனால் தனலெட்சுமி குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

erode

அதனை தானாகவே வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் விடுமுறைக்காக வீடு திரும்பியுள்ளார். திரும்பிய அவர் அண்ணியுடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதனை பற்றிய கணவரிடம் கேட்டுள்ளார் தனலெட்சுமி. இதனால் கோபமான முனீஸ்வரன் மனைவியை கொலை செய்துள்ளார். அதனை அடுத்து போலீசார் முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆனால் அந்த 2 வயது பச்சிளம் குழந்தை தாயை பறிக்கொடுத்தும், தந்தை சிறையிலும் இருக்க அனாதையாக இருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.