பூஜையுடன் இனிதே துவங்கிய சூர்யா 46 படம்.! ஹீரோயின் இந்த நடிகையா.! வைரல் புகைப்படங்கள்!!
ஒரே நாளில் இரண்டு முக்கிய புள்ளிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.! அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், எம்.எல்,ஏ செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி.!

திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக கொரோனா வைரஸ் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், போலீசார், மருத்துவர்கள் என பலரையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டநிலையில் தற்போது எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.