பேனா தொலைஞ்சு போச்சு.! கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் காவல்துறைக்கு புகார்.! அந்த பேனாவின் விலை என்ன தெரியுமா.?

பேனா தொலைஞ்சு போச்சு.! கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் காவல்துறைக்கு புகார்.! அந்த பேனாவின் விலை என்ன தெரியுமா.?


mp vijay vasant complaint for missing his pen

கன்னியாகுமரி எம்.பி-யான விஜய் வசந்த், சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவரின் பேனா தொலைந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய பேனாவை கண்டுபிடித்துத் தருமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் அளித்த புகாரில், தொலைந்து போன பேனா, கன்னியாகுமரி எம்.பி.யாக இருந்த தனது மறைந்த தந்தை எச்.வசந்தகுமாரிடம் இருந்து பெற்ற மாண்ட்ப்ளாங்க் ஃபவுண்டன் பேனா (Montblanc fountain pen) என்றும் வசந்த் கூறியுள்ளார்.

இந்தப் பேனாவின் நிப்புகள், தங்கத்தால் செய்யப்பட்டவை. இது ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பேனா செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும் மிகவும் விலை உயர்ந்தவை. பெரும்பாலும் பிரபலங்களும், உயர் பதவிகளில் இருப்பவர்களும், இப்பேனாவை விரும்பி வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

பேனாவின் விலை என்னமோ ஒன்றரை லட்சம்தான். ஆனால் இந்த பேனாவை அப்பாவின் நியாபகமாக பயன்படுத்தி வந்தேன் என கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.