ஒரு நொடி உயிரே போயிருக்கும்... ஓடும் ஜெனரேட்டரில் சிக்கிய பெண்ணின் தலைமுடி! அடுத்த நொடிப்பொழுதில் உறிந்த தலைத்தோல்... ரத்த வெள்ளத்தில் கிடந்த கொடூரம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. டிஜே இசைக்காக பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் அருகே சென்ற பெண்ணின் நீண்ட தலைமுடி, அதன் சுழலும் அச்சில் சிக்கியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், பெண்ணின் தலைத்தோல் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
ஜெனரேட்டரில் சிக்கிய நீண்ட தலைமுடி
கங்கைக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரேம் நகரைச் சேர்ந்த கல்லு சோன்கர் என்பவரது வீட்டின் வெளியே விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மேள தாளங்கள் முழங்க, குலால் தூவியபடி விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக காந்தி நகரைச் சேர்ந்த கல்லு சோன்கரின் மருமகள் பச்சா சோன்கரும் வந்திருந்தார்.
ஊர்வலம் நவீன் கங்கை பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்துகொண்டிருந்த திறந்தநிலை ஜெனரேட்டர் அருகே பச்சா சோன்கர் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது நீண்ட தலைமுடி எதிர்பாராதவிதமாக ஜெனரேட்டரின் சுழலும் அச்சில் சிக்கிக் கொண்டது.
நொடியில் மாறிய ஊர்வலத்தின் சூழல்
ஜெனரேட்டரை நிறுத்துவதற்குள் அதன் அச்சு வேகமாகச் சுழன்றதால் தலைமுடி பலமாக இழுக்கப்பட்டது. இதில் பெண்ணின் தலைத்தோல் கடுமையாக பெயர்ந்து, முடி ஜெனரேட்டரில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனிருந்தவர்கள் உடனடியாக ஜெனரேட்டரை நிறுத்தி, ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டனர்.
மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம்
பின்னர் அவர் அவசரமாக கான்பூர் ஹெலட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், காயம் மிகவும் தீவிரமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். தற்போது அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊர்வலங்களில் ஜெனரேட்டர், டிஜே உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றைச் சுற்றி பாதுகாப்பான இடைவெளியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஜெனரேட்டர் விபத்து மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீர் திடீரென தெருநாய்க்கு வந்த வெறி! வெறும் 30 நிமிஷத்துல 6 பேரை கடித்த கொடூரம்! வீதி வீதியாக வேட்டையாடிய வெறிநாய்... அதிர்ச்சி காட்சி!!!