கடைசி செல்ஃபி! ஐயோ... அந்த புள்ள மனசு எப்படி துடுச்சுருக்கும்! மூத்த மகன் முன்னிலையில்.... ஏரியில் இளைய மகனை இடுப்பில் கட்டி குதித்த தாய்! அதிர்ச்சி சம்பவம்!



mother-son-suicide-arialur-pond

அரியலூர் மாவட்டத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் மக்கள் மனங்களை உலுக்கி வருவதுடன், இந்த துயரத்தின் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, குடும்ப நிலைமைகள் மற்றும் மன அழுத்தம் குறித்து போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாய்-மகன் உயிரிழப்பு

விக்கிரமங்கலம் அருகே உள்ள புங்கங்குழி–ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் ரகுபதியின் மனைவி பாண்டி லெட்சுமி (33), தனது இளைய மகன் கவிலேஷ் (3) ஐத் துப்பட்டாவால் இடுப்பில் கட்டியபடி ஏரியில் குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி லெட்சுமி, காதலித்து 2017ஆம் ஆண்டு ரகுபதியை திருமணம் செய்தார். இவர்களுக்கு லோகேஷ் (7), கவிலேஷ் (3) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் திருப்பூரில் கட்டிட வேலை செய்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ரகுபதி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பூரிலிருந்து வரும் வழியில் நிகழ்ந்த துயரமான முடிவு

தீபாவளிக்குப் பின் இரண்டு மகன்களையும் அழைத்துச் சென்று திருப்பூரில் வேலை செய்த வந்த பாண்டி லெட்சுமி, நேற்று மாலை பஸ்ஸில் அரியலூர் வந்தார். விக்கிரமங்கலம் அருகே அம்பலவர் கட்டளை கிராமத்தில் இறங்கிய அவர், பேருந்து நிலையம் அருகே தனது மகன்களுடன் செல்போனில் செல்ஃபி எடுத்தார்.

செல்ஃபி எடுத்த பிறகு, மூத்த மகன் லோகேஷை தனியாக நிற்க வைத்துவிட்டு, இளைய மகன் கவிலேஷை துப்பட்டாவால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட லோகேஷின் கதறிய அழுகுரலைக் கேட்டு பொதுமக்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டெடுத்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.

போலீஸ் நடவடிக்கை மற்றும் விசாரணை

பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த துயர சம்பவத்திற்கு பின்னால் உள்ள தற்கொலை காரணம் என்ன என்பதில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூரில் தாயும் மகனும் உயிரிழந்த இந்த சம்பவம், சமூகத்தில் மனநலம் விழிப்புணர்வு தேவையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. விசாரணையின் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.