இதெல்லவா தாய்பாசம்.! தனது மகனுடன் மூச்சு வாங்க 2 கிமீ தூரம் ஓடிய தாய்.! ஏன் தெரியுமா?? நெகிழ்ச்சி சம்பவம்!!

இதெல்லவா தாய்பாசம்.! தனது மகனுடன் மூச்சு வாங்க 2 கிமீ தூரம் ஓடிய தாய்.! ஏன் தெரியுமா?? நெகிழ்ச்சி சம்பவம்!!



mother-run-with-son-to-encourage-him

மயிலாடுதுறையில் 2 கி.மீ
சிலம்பம் சுற்றியபடியே  ஸ்கேட்டிங் செய்த தனது மகனை உற்சாகப்படுத்தி அவனது தாயும் 2 கிமீ ஓடிய செயல் பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசித்து வருபவர் அஸ்வின். 13 வயது நிறைந்த அவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2 கிமீ தூரம் தூரம் ஸ்கேட்டிங் செய்து கொண்டே தனது கைகளால் சிலம்பம் சுற்றியபடி  சென்று சாதனை படைத்துள்ளார்.

அஸ்வின் சவால் நிறைந்த ஸ்கேட்டிங்கை செய்து கொண்டே, முழு கவனத்தையும் செலுத்தி சிலம்பம் சுற்றி சாதனை செய்துள்ளான். அப்பொழுது சிறுவன் ஸ்கேட்டிங் செய்யும் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவரை உற்சாகப்படுத்திய வரை அவரது தாயாரும் 2 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார்.  

பின் அவர் குறிப்பிட்ட இலக்கை அடைந்தவுடன் தனது மகனை கட்டித்தழுவி பாராட்டிய பிறகு மூச்சு வாங்க கீழே அமர்ந்து நார்மல் ஆகியுள்ளார். தனது மகனை ஊக்குவிப்பதற்காக அவனுக்கு உறுதுணையாக இரண்டு கிலோமீட்டர் தூரம் மூச்சு வாங்க ஓடிய தாயின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.