"தாயே இப்படி செய்யலாமா"...? கள்ளக்காதலை கண்டுபிடித்த மகள்.!! அடுத்து நடந்த கொடூரம்.!!
கடலூர் மாவட்டத்தில் தாயின் தகாத உறவு மகளுக்கு தெரிந்ததால் அவரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மணிமேகலை மற்றும் அனிதா என்ற 2 பெண்களை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவரது கணவன் இறந்து பிறகு தனது மகளுடன் அண்ணன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் மணிமேகலையின் மகளுக்கு அவரது அண்ணன் மனைவி அனிதா கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. சிறுமியை அடித்து உதைப்பதும் அவரது உணவில் மிளகாய் பொடியை கலந்து வைப்பதும் என தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்.

இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் மணிமேகலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நபருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு அவரது அண்ணனின் மனைவியான அனிதாவும் உடந்தையாக இருந்திருக்கிறார். மேலும் இதனை மணிமேகலையின் மகள் தெரிந்து கொண்டதால் அவர் வெளியே கூறி விடுவார் என்ற பயத்தில் மணிமேகலையும், அனிதாவும் சேர்ந்து சிறுமியை கொடுமைப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்... 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!!
இதனைத் தொடர்ந்து மணிமேகலை மற்றும் அனிதாவை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கள்ளக்காதலை மகள் அறிந்து கொண்டதால் அவர் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "சொன்னா கேக்க மாட்டியா"..? தங்கச்சியை சீண்டிய அப்பா.!! சித்தி, தந்தை படுகொலை,!! மகன் கைது.!!