ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"சொன்னா கேக்க மாட்டியா"..? தங்கச்சியை சீண்டிய அப்பா.!! சித்தி, தந்தை படுகொலை,!! மகன் கைது.!!
சேலம் அருகே தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தந்தை மற்றும் சித்தியை, மகனே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆகாஷ் என்ற இளைஞரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது திருமணம் சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி அருகேயுள்ள பூசாரிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 47 வயதான இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் ஆகாஷ்(23) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜெயந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து பழனிச்சாமி, ஜெயலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஜெயலட்சுமி தனது 18 வயது மகளுடன் பழனிச்சாமி வீட்டில் வசித்து வந்தார்.

மகளுக்கு பாலியல் தொல்லை இந்நிலையில் பழனிச்சாமி தனது இரண்டாவது மனைவியான ஜெயலட்சுமியின் 18 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதற்கு அவரது இரண்டாவது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக பழனிச்சாமியின் மகன் ஆகாஷ் தனது சித்தி மற்றும் தந்தையை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரது தந்தை தனது மகள் முறை இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதை நிறுத்தவில்லை.
இதையும் படிங்க: போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!
சித்தி மற்றும் தந்தை கொடூரமாக வெட்டி கொலை இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இது தொடர்பாக ஆகாஷ் மற்றும் அவரது தந்தை பழனிச்சாமி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது பழனிச்சாமி மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் ஆகாஷை மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் தனது தந்தை பழனிச்சாமி மற்றும் சித்தி ஜெயலட்சுமி ஆகியோரை வெட்டி கொலை செய்து அவர்களது உடலை சாக்கு மூட்டையில் கட்டி அப்பகுதியிலுள்ள ஏரியில் வீசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் ஏரியில் வீசப்பட்ட உடல்களையும் மீட்டு இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... கள்ள உறவில் வாக்குவாதம்.!! இளம் பெண் கொடூர கொலை.!!