புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இப்படியுமொரு கேடுகெட்ட தாயா?? பணத்திற்கு ஆசைப்பட்டு தன் 13 வயது மகளுக்கு செய்த கொடூரம்!! பகீர் சம்பவம்!!
மதுரை சம்பக்குளத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அவரது தந்தை சில வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார். இந்த நிலையில் அவரது தாயும் சிறுமியை வளர்க்க முன்வராமல் கைவிட்டுவிட்டார். அதனால் அந்த சிறுமியை செல்லூரில் வசித்துவந்த அவரது தந்தை வழி பாட்டியே வளர்த்து வந்துள்ளார். சிறுமி 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிகளில் கோடை விடுமுறை விட்டநிலையில், பாட்டியின் வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் அவரை சம்பக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.
மேலும் மகளை வைத்து பணம் சம்பாதிக்க எண்ணிய அந்த கொடூர தாய் தினமும் இரவு சிறுமிக்கே தெரியாமல் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் சில காமுகர்களை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். மேலும் அந்த கொடூரர்கள் அந்த சிறுமிக்கு சிகரெட்டால் சூடும் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி பாலியல் பலாத்காரத்தால் சிறுமி கருவுறாமல் இருப்பதற்காக அந்த தாய் மாத்திரைகளையும் கொடுத்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையால் பெரும் துயரத்திற்கு ஆளான அந்த சிறுமி தாயிடமிருந்து தப்பி பாட்டியிடம் வந்துள்ளார். பின் அவரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முற்பட்டுள்ளார். இதற்கிடையில் விபச்சார கும்பலை சேர்ந்த புவனேஷ் என்பவர் இதுகுறித்து புகாரளித்தால் சிறுமி மீது ஆசிட்வீசி கொலை செய்துவிடுவேன், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
ஆனாலும் சிறுமியின் பாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தாய், பெரியம்மா, சித்தி உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.