அம்மாவும் மகளும் சேர்ந்து செய்யுற காரியமா இது!! அதிர்ந்துபோன நகைக்கடைக்காரர்!! பட்டப்பகலில் நடந்த சம்பவம்..
போலி நகைகளை வைத்துவிட்டு தங்க நகைகளை திருடிச்சென்ற தாய் மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையிலுள்ள ஸ்ரீபிரியா தங்கநகை கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாடிக்கையாளர்கள் போல் நகைக்கடைக்குள் வந்த இரண்டு பெண்கள், கடையின் உரிமையாளர் அசந்த நேரம் பார்த்து, கடையில் இருந்த தங்க நகைகளை எடுத்து பைக்குள் வைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக போலியான நகைகளை வைத்துள்ளனர்.
பின்னர் கடையில் இருந்து அவசர அவசரமாக வெளியேறி, ஆட்டோ பிடித்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கடையின் உரிமையாளர், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை திருடிச் சென்றது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தாய் சுமதி அவரது மகள் பிரியதர்ஷினி என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் வைசராணை நடைபெற்றுவருகிறது.