கொரோனா வராமல் இருக்க உதவும் மூலிகை தேனீர்! மருத்துவமனைகளிலும் இதனை பயன்படுத்துகிறார்கள்!

கொரோனா வராமல் இருக்க உதவும் மூலிகை தேனீர்! மருத்துவமனைகளிலும் இதனை பயன்படுத்துகிறார்கள்!



Moolikai tea

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சித்தமருத்துவத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், மூலிகை தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது. மூலிகை தேநீரை தற்போது அனைவரும் அருந்திவந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஏந்த நோயையும் வரவிடாமல் தடுக்கும் என சித்த மருத்துவ சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

Moolikai tea

மூலிகை தேநீருக்கு தேவையான பொருட்கள்:
சுக்கு - 100 கிராம்,
அதிமதுரம் - 100 கிராம்,
சித்தரத்தை - 30 கிராம்
கடுக்காய்த்தோல்- 30 கிராம்
மஞ்சள் - 10 கிராம்,
திப்பிலி - 5 கிராம்,
ஓமம் - 5 கிராம்
கிராம்பு- 5 கிராம்,
மிளகு - 5 கிராம்.

மேற்குறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும். 
ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.
இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.


இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம். இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும். 
சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும். இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.

கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை  தமிழரின் மூலிகை மருந்து ஓட ஓட விரட்டுகிறது  என்பது வியப்பான நற்செய்தி. எல்லோருக்கும் பயனுள்ள இந்த அரிய குறிப்பை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுவோம்.