ஒரு வயது குழந்தையுடன் சேர்ந்து, தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்ட கொடூர சம்பவம்!

ஒரு வயது குழந்தையுடன் சேர்ந்து, தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்ட கொடூர சம்பவம்!


mom and child fire suicide

சென்னையை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் லதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயது பெண் குழந்தை இருந்துள்ளது. சத்தியநாராயணனின் தாயும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருந்த லதாவிற்கு உடலில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கருகலைக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்த நேற்று வீடு திரும்பிய நிலையில் லதாவிற்கு மீண்டும் உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

suicide

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான லதா, நேற்று மதியம் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தற்கொலை செய்துள்ளார். இந்தநிலையில் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் கரும்புகையுடன் அலறல் சத்தம் கேட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வேகமாக வீட்டை திறந்து பார்த்தனர். 

அங்கு பலத்த தீக்காயங்களுடன் லதா இறந்து கிடந்துள்ளார். அவர் அருகே லதாவின் ஒரு வயது குழந்தை மிகவும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.