கள்ளச்சாராயதால் உயிரிழந்த 9 பேர்.! விழுப்புரம் நோக்கி புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

கள்ளச்சாராயதால் உயிரிழந்த 9 பேர்.! விழுப்புரம் நோக்கி புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!



M.K.Stalin will go to Villupuram to console the families of those who died after drinking adulterated liquor

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் போலி மது (கள்ளச்சாராயம்) விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். கள்ளச்சாராய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலி மது விற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 நிதியுதவியும் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அவர் இன்று பிற்பகலில் விழுப்புரம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.