டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! முதல்வர் ஸ்டாலின் வகுத்த வியூகம் ஒர்க் அவுட் ஆனால் தமிழகமே குஷி தான்.!

டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! முதல்வர் ஸ்டாலின் வகுத்த வியூகம் ஒர்க் அவுட் ஆனால் தமிழகமே குஷி தான்.!



mk stalin went to delhi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். முதல்வராக பதவியேற்றப்பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தநிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்ட ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

டெல்லியில், தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின், மாலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, காவிரி விவகாரம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, 7 பேர் விடுதலை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து, கொரோனா தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் விவாதிக்க உள்ளார்.

இதனையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பின்னர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். இதனையடுத்து இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். 

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை நாளை சந்தித்து பேச உள்ளார். பின்னர் நாளை தனிவிமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் தமிழக முதல்வர் அவர்கள் வைக்கவிருக்கும் கோரிக்கைகள் நிறைவேறினால் தமிழகமக்கள் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.