தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்! கண்கலங்கியபடி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!

Summary:

Mk stalin tweet video about mk. Stalin

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன் கடுமையான மூச்சுதிணறலால்  கடந்த 2 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார். மேலும் 62-வது பிறந்தநாளன்றே அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சுகாதார துறை அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி ஆம்புலன்ஸ் மூலம் எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வேதனையுடன் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்


Advertisement