தமிழகம் Covid-19

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.? தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தகவல்.!

Summary:

தமிழகத்தில் கொரோனா பரவளின் 2வது அலை தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் அத

தமிழகத்தில் கொரோனா பரவளின் 2வது அலை தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டும், 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மே 24 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்காக மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிக்க பரிசீலனை செய்யப்படும். ஊரடங்கு காரணமாக சென்னையில் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. 

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே இந்த தளவுகள் இல்லாத முழு ஊரடங்கு. கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
 


Advertisement