இவர்கள் இல்லையென்றால் அரசாங்கமே இல்லை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.!!

இவர்கள் இல்லையென்றால் அரசாங்கமே இல்லை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.!!



mk stalin talk about government employees

சென்னை மதவாரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் 14-ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று பேசுகையில், அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை. அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான்.

 நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரசு ஊழியர்களுக்காக ஏரளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அரசு பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு படிப்படியாக நிச்சயமாக செயல்படுத்தும். கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் அகலவிலைப்படி உயர்வை அமல்படுத்தியுள்ளோம். ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.  

ஆங்கிலத்தில் Do Or Die(செய் அல்லது செத்துமடி) என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால் என்னை பொருத்தவரை அதை Do And Die என்று எடுத்துக்கொள்வேன். செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன் என்ற உணர்வோடு தான் நான் என்னுடைய கடமையை ஆற்றி கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.