அரசியல் தமிழகம்

மாணவர்களின் வாக்குகளை கவர்வதற்கு மு.க. ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்.! அணைத்து கல்வி கடனும் ரத்தா.?

Summary:

திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில், நேற்று திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தி.மு.க., தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அங்கு அவர் பேசுகையில், கல்வியையும் சுகாதாரத்தையும் தரமிழக்க வைத்துள்ளது தற்போதைய அரசு. இதனால், அதிமுகவை நிராகரிக்கவேண்டும். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக வாக்களிக்க இருக்கும் மாணவர்களின் வாக்குகளை கவர்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுத்த வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே ரிசர்வ் வங்கியின் அனுமதியால் அளிக்கப்பட்ட கல்விக்கடனை ஒரு மாநில அரசு எப்படி ரத்து செய்ய முடியும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


Advertisement