தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு தீக்குளித்த நபர் உயிரிழப்பு.! இவர் இப்படி செய்ததற்க்கு இதுவே முக்கிய காரணம்!!

Summary:

மு க ஸ்டாலின் வீட்டின்முன் தீக்குளித்த நபர்! இவர் இப்படி செய்ததற்க்கு இதுவே முக்கிய காரணம்!!

தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.இதனையடுத்து தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் ஜமீன் தேவர்குளம் ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஜமீன் தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த வெற்றிமாறன்(வயது48), அவரது மனைவி சபரியம்மாள் (வயது46), மதிமுகவைச் சேர்ந்த ராமசாமி ஆகியோர் இப்பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த வேட்புமனுவை பரிசீலனை செய்தபோது, வெற்றிமாறனுக்கு வீட்டுவரி பாக்கி இருப்பதை மதிமுகாவைச் சேர்ந்த ராமசாமி தரப்பினர் சுட்டிக்காட்டிய நிலையில், வெற்றிமாறன் மற்றும் அவரது மனைவியின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குருவிகுளம் ஒன்றியம் ஜமீன் தேவர்குளம்   ஊராட்சித் தலைவராக ராமசாமி போட்டியின்றித் தேர்வானார்.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த வெற்றிமாறன், கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன் வந்து நின்று, தன் உடலில் தீவைத்துக் கொண்டார். பிறகு முக ஸ்டாலின் வீட்டின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரது உடலில் பற்றிய தீயை அணைத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துவந்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வெற்றிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


Advertisement