தமிழகம்

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள், நம் எல்லோரையும் கொரோனாவில் இருந்து காப்பாற்ற போராடிவரும் ஒருவரின் குழந்தைகள்.!

Summary:

Minster vijaya basker daughters photos

புகைப்படத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்களின் குழந்தைகள்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து நேற்று காலை முதல் இரவு வரை மக்கள் ஒருநாள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றினர். மேலும், மாலை 5 மணியளவில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுக்கு அருகில் வந்து தங்களுக்காக உயிரை பணயம் வைத்து உழைத்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு கை தட்டி தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனாவில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டும் இல்லாமல், அனைத்தையும் முன்னின்றி கவனித்துவருகிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள்.

இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனது மகள்கள் ரிதன்யா மற்றும் அனன்யா இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கிவரும் மருத்துவ ஊழியர்களுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.


Advertisement