பரபரப்பு... கிருஷ்ணகிரி வெடி விபத்திற்கான காரணம்... அமைச்சர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!

பரபரப்பு... கிருஷ்ணகிரி வெடி விபத்திற்கான காரணம்... அமைச்சர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!



minister-release-the-reason-for-krishnagiri-goddown-bla

தமிழ்நாட்டையே உலுக்கிய கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பந்தமாக பரபரப்பான அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது தடையவியல் துறை. இதனைத் தொடர்ந்து இந்த வெடி விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு இருக்கிறது .

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள நேதாஜி தெருவில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. குடியிருப்புகள் நிறைந்த அந்த பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தால் மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.

tamilnaduமேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் மேலும் நான்கு பேர் உயிரிழந்ததால் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பான காரணம் குறித்து தடையவியல் துறையும் காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த விபத்திற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.

tamilnaduஇதன்படி 9 பேரை பலி கொண்ட இந்த விபத்திற்கான காரணம் சிலிண்டர் வெடித்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தடையவியல் துறை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். சிலிண்டர் வெடித்ததன் பின் பட்டாசுகள் வெடித்து சிதறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என அமைச்சர் கூறி இருக்கிறார்.