அரசியல் தமிழகம் TN Election 2021

ஆஹா!! பேஷ் பேஷ்!! பொடிமாஸ் தயார்!! ஃபாஸ்ட் புட் கடையில் பொடிமாஸ் போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயக்குமார்!!

Summary:

வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பொடிமாஸ் போட்டுக்கொடுத்து வாக்கு சேகரி

வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பொடிமாஸ் போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் தனது வித்தியாசமான முயற்சியினால் தனது தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

முன்னதாக எம்.ஜி.ஆர்.பாடல்களை பாடி தனது தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுவந்தார் அமைச்சர் ஜெயக்குமார். தற்போது தனது தொகுதி மக்களிடையே வாக்கு சேகரிக்க சென்றிருந்த அவர், அந்த பகுதியில் இருந்த ஃபாஸ்ட் புட் கடை ஒன்றை பார்த்ததும் சட்டென கடைக்குள் சென்றுவிட்டார்.

அதுமட்டும் இல்லாமல் உடனே வெங்காயம், முட்டை ஆகியவற்றை எடுத்து பொடிமாஸ் போட தொடங்கிவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார். மேலும் அவருடன் இருந்த கட்சி தொடந்தார்கள் உங்கள் வாக்கு அண்ணன் ஜெய்குமாருக்கே என கோஷமிட்ட, சுட சுட பொடிமாஸ் செய்துமுடித்த அமைச்சர், அதை அங்கிருந்த தொண்டர்களுக்கும், சிறுவர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement