அப்பாதான் அம்மாவை கொளுத்தினார்! ராணுவவீரரின் கொடூரத்தை அம்பலப்படுத்திய குழந்தை!! வெளியான பகீர் காரணம்!

அப்பாதான் அம்மாவை கொளுத்தினார்! ராணுவவீரரின் கொடூரத்தை அம்பலப்படுத்திய குழந்தை!! வெளியான பகீர் காரணம்!


military man killed wife for dowry

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார. இவரது மனைவி ரேணுகா. இந்த தம்பதியினருக்கு யோகி ஸ்ரீ என்ற 7 வயது மகளும், தன்யா ஸ்ரீ என்ற 1வயது மகளும் உள்ளனர் . இந்நிலையில் அவர்கள் குஜராத்தில் ராணுவ குடிமனையில் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேணுகாவின் தந்தை ஏழுமலைக்கு, ராணுவ அலுவலகத்திலிருந்து ரேணுகா சிலிண்டர் வெடித்து தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போன் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏழுமலையின் குடும்பத்தினர்கள் பதறி அடித்துக்கொண்டு குஜராத் சென்றுள்ளனர் உயிரிழந்த தனது மகளின் எரிந்த சடலத்தை கண்டு அவர்கள் வேதனையில் கதறி அழுதுள்ளனர்.

dowri problem

அதனைத் தொடர்ந்து ரேணுகாவின் உடல் கிருஷ்ணகிரிக்கு கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குழந்தை யோகிஸ்ரீ தனது அப்பா தான் அம்மா மீது மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்திவிட்டார், நானும் தங்கச்சியும் அழுதோம் என கூறியுள்ளது.

இதனைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்த ரேணுகாவின் தந்தை ஏழுமலை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி நாகேந்திரன் என் மகளை எரித்துக் கொன்று விட்டார் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.