தமிழகம் சமூகம்

எவனும் தடுக்க முடியாது... தமிழகத்தை கைவிடாத காவிரித்தாய்; முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் ஆணை.

Summary:

மேட்டூர்: தமிழக மக்களுக்கு நல்ல செய்தியாக மேட்டூர் அணை நீர்மட்டம், 115 அடிக்கு மேல் உயர்ந்து கொண்டு இருக்கிறது. நாளை மறுநாள் ( 23 ம் தேதி திங்கட்கிழமை ) முழு கொள்ளவும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் உபரிநீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணையில் மொத்த நீர்மட்டம், 120 அடி; மொத்த கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கடந்த மாதம், 14ல், 40 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று, 115 அடி, 12 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 85.14 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப, இன்னும், 8.5 டி.எம்.சி., தேவை. 

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 64 ஆயிரத்து, 595 கனஅடி நீர் வந்தது. கர்நாடகாவின் கபினியில், 15 ஆயிரம் கன அடி, கே.ஆர்.எஸ்.,ல், 50 ஆயிரம் கன அடிஎன, 65 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 

mettur recent images க்கான பட முடிவு

தொடர்ச்சியாக உபரி நீர் வந்துகொண்டிருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 120 அடியை, நாளை மறுநாள் காலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை கட்டி, 83 ஆண்டுகளில், 39ம் முறையாக, நடப்பாண்டு அணை நிரம்பி, உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது. இறுதியாக, 2013ல் அணை நிரம்பி, உபரிநீர், 16 கண் மதகு வழியாக காவிரியில் வெளியேற்றப்பட்டது. நான்காண்டுகளுக்கு பின், நடப்பாண்டு அணை நிரம்பவுள்ளது. 

mettur recent images க்கான பட முடிவு

மேட்டூர் அணை நீர்மட்டம், 114 அடியாக உயர்ந்து அணை கடல்போல் காட்சியளிக்கிறது. மேட்டூர் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுத்தம் செய்ய தேக்கப்படும் நீரை, அணை சுரங்கமின்நிலையம் அருகே, காவிரி பாலத்தில் வெளியேற்றுவதால், போக்குவரத்து பாதிப்பதோடு, சாலை சேதமடையும் நிலை உருவாகியுள்ளது. அணையிலிருந்து, டெல்டா பாசனத்துக்கு, மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றும், 20 ஆயிரம் கனஅடி நீர், காவிரியாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. 

மேட்டூர் ஆணை நிரம்பும் செய்தி கேட்டு தமிழக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 


Advertisement