தமிழகம்

சாதரண கண்ணாடி தானே என நினைத்து கை வைத்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

mettupalayam-lodge-behind-the-mirror-secret-room-sex-work

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏராளமான லாட்ஜ்கள் இயங்கி வருகின்றன. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில் அங்கு உள்ள லாட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

ஆனால் அப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் மட்டும் அதிகப்படியான ஆள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் அந்த லாட்ஜ்க்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த லாட்ஜ்ன் முன் பக்கம் மூடப்பட்டிருந்த நிலையில் பின்புறமாக சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த லாட்ஜில் ஆண், பெண் அதிகமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின் ஒவ்வொரு ரூமிற்கும் சென்று சோதனை செய்துள்ளனர்.

மேலும் அந்த லாட்ஜில் பெரிய அளவில் கண்ணாடி இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அதன் அருகில் சென்று கண்ணாடியில் லேசாக கை வைத்துள்ளனர். உடனே அது தானியங்கி கதவு போல் திறந்துள்ளது. அதன் உள்ளே சென்று பார்த்த போது அதனுள் ரகசிய அறைகள் அமைத்து பாலியல் தொழில் செய்து வந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அதன்பின் போலீசார் லாட்ஜ் காப்பாளர், ஊழியர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Advertisement