தமிழகம்

நான் கேட்கும் போதெல்லாம் தரணும்..! மார்பிங் புகைப்படத்தை வைத்து இளம் பெண்களை டார்கெட் செய்த வாலிபர்.

Summary:

Men cheating money from young girls using morphing photos

போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் இளம் பெண்களிடம் பேசி, அவர்களின் புகைப்படங்களை வாங்கி மார்பிங் செய்து பணம் பறித்துவந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் என்னும் பகுதியை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான சிவகுமார். வேலைவெட்டிக்கு போகாத சிவகுமார் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பல போலியான கணக்குகளை உருவாக்கி இளம் பெண்களை தன் வலையில் விழவைத்துள்ளார்.

சிவகுமாரின் ஆசை பேச்சில் மயங்கிய பெண்கள் சிலர் அவர் கேட்கும்போது தங்களின் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். இதுபோன்ற இளம் பெண்கள் அனுப்பும் புகைப்படங்களை ஆபாச படங்களுடன் சேர்ந்து மார்பிங் செய்து அந்த பெண்களிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி, பணம் பறித்து வந்துள்ளார் சிவகுமார்.

இதேபோன்று சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை மிரட்டவே, அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்தியேக மொபைல் எண்ணில் (94899 19722) தொடர்புகொண்டு இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இளம் பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு சிவகுமாரை கைது செய்தனர்.

பல்வேறு போலியான கணக்குகள் மூலம் சிவகுமார் இளம் பெண்களை தன் வழியில் வீழ்த்தியதும், தான் கேட்கும்போதெல்லாம் பணம் தராவிட்டால் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Advertisement