செல்போன் பேசியபடியே பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர் ப்ரியா.. சர்ச்சை வீடியோ வைரல்!

செல்போன் பேசியபடியே பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர் ப்ரியா.. சர்ச்சை வீடியோ வைரல்!



Mayor Priya talk phone give certificate video

செல்போன் பேசியபடியே அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியாவின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொண்டாடப்பட்டது. அங்கு மேயர் பிரியா ராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

radhakrishnan

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது சாலைகள் வழங்கும் அதிகாரிகளை அலட்சியப்படுத்தும் வகையில் மேயர் பிரியாவின் செயல் இருந்தது. மேயர் பிரியா சான்றிதழ் வழங்கும் போது, தனக்கு அருகே நின்று கொண்டிருந்த மகேஷ் குமார் என்பவரிடம் மகேஷ் குமார் என்பவரிடம் பேசிக்கொண்டே அலட்சியமாக வழங்கினார்.

மேலும், அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அந்த போனை எடுத்து பேச ஆரம்பித்துவிட்டார். இதனிடையே அடுத்த சான்றிதழ் வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவருக்காக காத்திருந்தார்.

ஆனால் மேயர் பிரியா காதில் போனை வைத்துக் கொண்டு கழுத்தை சாய்த்தபடி போன் பேசிய படியே அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.