நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த பாஜக-வினர்.! என்ன காரணம் தெரியுமா.?

நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த பாஜக-வினர்.! என்ன காரணம் தெரியுமா.?


marriage for dog

காதலர் தினமான நேற்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தங்களது அன்பினை பலவிதமாக வெளிப்படுத்தினர். காதலர் தினம் என்றாலே சில இந்துத்துவா அமைப்புகளுக்கு அலர்ஜி வந்தது போலத்தான் ஒவ்வொரு வருடமும் அமையும். எனவே காதலர் தினத்தன்று வீம்புக்கு என்றே எதையாவது ஏடாகூடமாக செய்து பரபரப்பை ஏற்படுத்துவது இயல்பான ஒன்று.

இந்தநிலையில், இந்த வருடமும் சிலர் நூதன முறையில் காதலர் தினத்தை எதிர்த்துள்ளனர். அதாவது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தென்சிறுவளூர் என்ற பகுதியில் காதலர்தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க-வினர் நாய்களுக்கு திருமணம் செய்துவைத்தனர்.

இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தில் இந்து முன்னணி அமைப்பினர் நேற்று 2 தெருநாய்களை பிடித்து அவற்றுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.