மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதால் எவ்வளவு மருத்துவபலன்கள் தெரியுமா?

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதால் எவ்வளவு மருத்துவபலன்கள் தெரியுமா?



margali-month-special


மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி மாதம் என்பார்கள். அதனால்தான் ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார் கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று. மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக மார்கழியை கூறுகிறார்கள்.

பொதுவாக எல்லா மாதங்களும் வீட்டிற்கு கோலம் போடுகிறார்கள். ஆனால், மார்கழி என்றால் கோலத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்துதான் ஆண்டாள், பெருமாளை மணாளனாகக் கொண்டாள் என்ற புராண கதை உண்டு. 

margali

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து வீட்டின் வாசலில், தினமும் கோலம் போடுவதால், அந்த  வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடக்கும். மேலும், நன்மைகள் பல எளிதாக அவர்களின் வீடு தேடி வந்தடையும். அதுமட்டுமின்றி மார்கழி மாதத்தில் வீட்டுவாசலில் கோலம் போடுவதால் மருத்துவ பயனும் உண்டு.

மார்கழி மாதத்தில் வான்மண்டலத்தில் பூமியை ஒட்டிய காற்றுமண்டலத்தில் O3 எனும் தூய ஆக்ஸிஜன் அடர்த்தியாக இருக்குமாம். அந்த நேரத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதால், தூய ஆக்ஸிஜன் நிரம்பிய காற்றை சுவாசிக்க முடிகிறது. இதனால் தான் மார்கழி அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்.