தமிழகம்

மது வாங்கி தராவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டிய மனைவி.! கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு, பதைபதைக்கும் சம்பவம்.

Summary:

Manaivi adict in drinks so husband murder him wife

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் -முருகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் முருகவள்ளி சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் முருகவள்ளியின் பெற்றோர் அவர்களது திருமணத்தை ஏற்று கொள்ளாமல் விலக்கி வைத்துள்ளனர். 

இந்நிலையில் சந்தோசமாக சென்று கொண்டிருந்த முருகவள்ளி, சண்முகராஜ் தம்பதியினரின் வாழ்க்கையில் திடீரென மனைவியின் தவறான நடத்தையால் பிரச்சனை ஆரம்பமாக ஆரம்பித்துள்ளது. காரணம் பக்கத்து வீட்டு பெண்களுடன் முருகவள்ளி பேசி பழகிய போது, ஓட்கா அருந்தினால் அழகாக இருக்கலாம் என கூறியுள்ளனர். அதனால் தினமும் ஓட்கா சாப்பிட ஆரம்பித்துள்ளார் முருகவள்ளி. 

அதுமட்டுமின்றி வீட்டு செலவுக்கு கொடுக்கும் பணம் போக, அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியும் குடிக்கத் தொடங்கியுள்ளார் முருகவள்ளி. இதனால் ஆத்திரமான சண்முகராஜ் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார்.அதற்கு மனைவி நீ தினமும் மது வாங்கி தராவிட்டால் நீ தூங்கும் போது தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். 

அதனை அடுத்து சண்முகராஜ் தனது பிள்ளைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு தனது மனைவிக்கு ஓட்கா வாங்கி கொடுத்துள்ளார். குடித்துவிட்டு முருகவள்ளி மட்டையானதை அடுத்து சண்முகராஜ் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

அதாவது மனைவி தன்னை கொல்வதற்கு முன்பாக நானே மனைவியை கொன்று விடலாம் என எண்ணி கொலை செய்து விட்டு பேருந்து இல்லாததால் நடந்தே தப்பித்து சென்றுள்ளார். ஆனால் போலீசார் அவர்களை பிடித்து கைது செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 


Advertisement