கடைக்கு தலைகாணி வாங்க வந்த இளைஞர்.. குடோவுன் சென்றுவிட்டு திரும்பிய உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

கடைக்கு தலைகாணி வாங்க வந்த இளைஞர்.. குடோவுன் சென்றுவிட்டு திரும்பிய உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..


Man steel money from textile shop

கடைக்கு தலைகாணி வாங்குவதுபோல் வந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் என்னும் பகுதியில் தர்மராஜ் என்பவர் ஜவுளி கடை ஒன்றை நடத்திவருகிறார். இவரது கடைக்கு நேற்று வந்த டிப் டாப் இளைஞர் ஒருவர், தனக்கு தலைகாணி ஒன்று வேண்டும் என கேட்டுள்ளார். கடைக்காரரும் கடையில் இருந்த பலவிதமான தலைகாணிகளையும் காட்டியும், தனக்கு எதுவமே பிடிக்கவில்லை என அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, ஒரு ஐந்து நிமிடம் வெய்ட் பண்ணுங்க சார், உங்களுக்கு பிடித்தமாதி தலைகாணி குடோவுனில் இருக்கு, நா எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு கடைக்காரர் குடோவுனுக்கு சென்றுள்ளார். அந்த சமயம் கடையில் யாரும் இல்லாததை பார்த்த அந்த இளைஞர், உடனே கடையில் இருந்த கல்லாப்பெட்டியை திறந்து, அதில் இருந்த 10 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

குடோவுனுக்கு சென்றுவிட்டு மீண்டும் கடைக்கு திரும்பிய கடைக்காரர், அந்த இளைஞர் அங்கு இல்லாதையும், கல்லாப்பெட்டி திறந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னனர் இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார் போலீசார், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு கடையில் திருடிய இளைஞரை தேடிவருகின்றனர்.