உஷார் மக்களே... மகளின் பள்ளி தோழியை மனைவியாக்க முயன்ற விபரீதன்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

உஷார் மக்களே... மகளின் பள்ளி தோழியை மனைவியாக்க முயன்ற விபரீதன்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!


Man raped his daughter's friend

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மகளின் தோழி ஒருவர் அடிக்கடி சுரேஷ் விட்டிற்கு வந்து சென்றுள்ளார். அதில் குறித்த மாணவி கடந்த 27 ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவி அடிக்கடி தனது தோழி வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது.

chennai

உடனே போலீசார் பள்ளி தோழியின் வீடான சுரேஷ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சுரேஷ், மகளின் தோழியிடம் தனது மனைவிக்கு காச நோய் இருப்பதாகவும் நீண்ட நாள் உயிர் வாழ மாட்டார் என மருத்துவர்கள் கூறியதாக கதை அளந்துள்ளார்.

மேலும் தனது மனைவியின் இடத்தில் நீ எனக்கு வேண்டும் என்று ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை மயக்கியுள்ளார். மேலும் தனது மகளுடன் எப்போதும் தனது வீட்டில் வசித்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

தனது மகளின் தோழி தனக்கு மகள் என்பதை உணராத காமுகன் பக்கத்து ஏரியாவில் வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. போலீசார் சுரேஷை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.