"நான் சொல்றதை கேட்க மாட்டியா..." பேச்சை மீறிய மனைவி.!! கணவனின் விபரீத முடிவு.!!



man-murdered-brother-family-dispute-turns-violence

பொள்ளாச்சி அருகே விஷம் குடித்த அண்ணனை காப்பாற்று முயன்ற தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அண்ணனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி மாவட்டம் சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதிராம்(54). இவருக்கு திருமணமாகி வெண்ணிலா(45) என்ற மனைவி இருக்கிறார். மேலும் ரகுபதிராமின் தம்பி செந்தில்குமாரும்(46) தனது அண்ணனுடன் வாழ்ந்து வந்துருக்கிறார். இந்நிலையில் ரகுபதிராமின் மனைவி சமையல் வேலைகளுக்கு சென்று வந்ததாக தெரிகிறது. இது ரகுபதிராமிற்கு பிடிக்கவில்லை.

tamilnadu

வேலைக்கு செல்ல வேண்டாம் என தனது மனைவியிடம் ரகுபதிராம் பலமுறை கூறியிருக்கிறார். இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ரகுபதிராமின் மனைவி சமையல் வேலைக்கு செல்வதாக கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரகுபதிராம் மனைவி சமையல் வேலைக்கு செல்ல வேண்டாம் என கண்டித்துள்ளார். மேலும் தனது பேச்சை மீறி சமையல் வேலைக்கு சென்றால் விஷம் குடித்து தற்கொலை செய்யப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார். அவரது பேச்சையும் மீறி மனைவி வேலைக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: "நண்பனின் மனைவியுடன் குளு குளு ட்ரிப்..." தொழிலதிபர் சுட்டுக்கொலை.!!

இதனால் விரக்தியடைந்த ரகுபதிராம் விஷம் குடித்திருத்துகிறார். மேலும் இதனை செல்போன் மூலம் மனைவியிடமும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி செந்தில்குமாரிடம் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார் செந்தில்குமார். இது தொடர்பாக இருவரிடையே ஏற்பட்ட தகராறில் தனது தம்பியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார் ரகுபதிராம். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.மேலும் ரகுபதிராமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக ரகுபதிராம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!