"நண்பனின் மனைவியுடன் குளு குளு ட்ரிப்..." தொழிலதிபர் சுட்டுக்கொலை.!!



entrepreneur-shot-dead-for-dating-with-friend-wife

டெல்லியில் நண்பனின் மனைவியை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி அருகேயுள்ள ஃபரிதாபாத் நகரை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி மேகா என்ற மனைவி இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற தொழிலதிபர் வினோத்தின் நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். இந்நிலையில் சுரேஷ்குமார் மற்றும் வினோத்தின் மனைவி மேகா ஆகியோரிடையே நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது.

India

இந்நிலையில் சுரேஷ்குமார் தனது நண்பனின் மனைவியான மேகாவை மணாலிக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் சென்று அவருடன் ஓர் இரவு தங்கியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் டெல்லி திரும்பி இருக்கின்றனர். அப்போது சுரேஷ்குமாரை சந்தித்த வினோத் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: "என் மனைவி கேக்குதா உனக்கு.." கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்.!! கணவன் எடுத்த கொடூர முடிவு.!!

இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட வினோத்தை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "கசந்தது காதல்..." கல்லைப் போட்டுக் கொன்ற மாமனார்.!! குமரியில் பயங்கரம்.!!