தமிழகம்

அவளை என்னால் மறக்க முடியாது! இளைஞரை கொன்று ஆற்றில் புதைத்த நண்பர்கள். அதிர்ச்சி காரணம்!

Summary:

Man killed by friends for love issue

திருவள்ளுர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை அவரது நண்பர்களே அடித்து கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் மேல்நல்லாத்தூரில் ஏரிக்கரை ஒன்றில் கடந்த 27 ஆம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இதுகுறித்து விசாரித்ததில் அந்த இளைஞர் பெயர் அதேபகுதியை சேர்ந்த மகேஷ் குமார் வயது 20 எனப்தையும் போலீசார் கண்டறிந்து அந்த இளைஞரின் பெற்றோர்க்கு தகவல் கொடுத்துள்ளனர். மகேஷ்குமாரின் கொலை குறித்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது.

வேலை ஏதும் இல்லாத மகேஷ் குமார் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதே பெண்ணை, மகேஷின் நண்பர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகேஷ் தனது காதலுக்கு இடையூறாக வரக்கூடும் என எண்ணிய அவரது நண்பர் மகேஷ் குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இதனால் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மகேஷ்குமாரை மது அருந்த அவர் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரிடம் அந்த பெண்ணை மறந்துவிடவேண்டும் என அவர் கூற மகேஷ் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர் மகேஷ் குமாரை அடித்து கொலை செய்து அங்கிருந்த ஏரிக்கரையில் புதைத்துள்ளார்.

தற்போது இந்த கொலை வழக்கில் இதுவரை 5 பேர் சரண் அடைந்துள்ளனர். உண்மையிலையே மகேஷ் காதல் விவகாரத்திற்காகத்தான் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement