கூடா நட்பு கேடாய் முடிந்த சம்பவம்.! பரிதாபமாக போன 3 உயிர்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

கூடா நட்பு கேடாய் முடிந்த சம்பவம்.! பரிதாபமாக போன 3 உயிர்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!


man killed 3 friends

தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி என்பவரும், மதுரையை சேர்ந்த சங்கர் என்பவரும் நண்பர்கள். திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த இவர்கள் கல்லூரி சாலையில் தங்கியிருந்தனர். இந்நிலையில் அவர்கள் தங்கியருந்த வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆய்வு செய்த போது, அங்கிருந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த சடலம் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பதும், அவருடன் தங்கிருந்த மதுரையை சேர்ந்த சங்கர் என்பவர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சங்கரை போலீசார் தேடுயுள்ளனர். அப்போது கோவை சிறையில் சங்கர் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சங்கரை காவலில் எடுத்து அவனிடம் நடத்தப்பட விசாரணையில், கடந்த 2018-ல் கங்காநகர் பகுதியில் உடன் தங்கியிருந்த நண்பருடன் ஏற்பட்ட தகராறில் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறியுள்ளான்.

Murder

இதனையடுத்து ஜாமீனில் வந்த நிலையில், இசக்கிமுத்துவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், சம்பவத்தன்று இசக்கிமுத்துவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்து அந்த சடலத்துடன் ஒரு வாரம் அதே அறையில் தங்கியதாகவும் கூறியுள்ளான்.

இந்த கொலையை செய்துவிட்டு வெங்கமேட்டிலுள்ள அவரது நண்பர் இளம்பரிதி என்பவருடன் ஒரே அறையில் தங்கியுள்ளான். அங்கு இளம்பரிதிக்கும் அவரது நண்பர் பாக்கியம் மற்றும் அன்பரசு என்பவருக்கும் போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அன்பரசு கொலை செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் மூன்று பேரையும் ஒரே பாணியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், இசக்கி முத்து கொலை வழக்கில் சங்கரை 3 வது முறையாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.